Posts

Showing posts from 2024

இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻 13/06/2024

 இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻 13/06/2024 உயிர் உருகுதே ரகுமானின் இசையை கேட்கும்போது..... மனம் கரையுதே ரகுமானின் குரலை கேட்கும்போது தனிமையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு பாடல் ஒன்றே இறைவன்.. அருமையான பாடல் வரிகள்.. படம்: கோப்ரா பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தாமரை பாடல் வரிகள் ஆண் : {நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை} (2) ஆண் : உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே ஆண் : ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன் நினைவினிலேனோ வந்தாள் அன்னை ஆண் : நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை ஆண் : மேற்கே உன் சாரல் மழை வா வா வந்தென்னை நனை யாரும் முன் சொல்லா கதை இன்பம் போல் தோன்றும் வதை ஆண் : கண்டேன் என் மாயாவி மானை என் ரீங்கார வீணை நீ நான் செய்யும் ஆராதனை ஆண் : {நீ இங்கே இல்லை என்றால் நான் இல்லை} (2) ஆண் : பாயும் உன் கார் கூந்தலில் என்னை ஏன் நீ ஏந்தினாய் மண்ணில் நான் வீழும் முன்னே என்னை நீ தான் தாங்கினாய் ஆண் : ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில் நான் சாய்ந்தாடும் நாளில் ஏன் லேசாக நீ தேம்பினாய் ஆண் : உயிர் உருகுதே மனம் கரையுதே...

வாணி ஜெயராம் பாடிய, மறக்க முடியாத 10 பாடல்கள்

Image
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் நூற்றுக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் உங்களால் மறக்க முடியாத பாடல்கள் எவை? நினைவுகூரத்தக்க அவரது 10 பாடல்களும், அவற்றின் பின்னணியும்: 1. மல்லிகை என் மன்னன் மயங்கும்: 1974ல் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், வாலி பாடலை எழுதியிருந்தார். முத்துராமனும் கே.ஆர். விஜயாவும் இந்தப் பாடலைப் பாடி நடித்திருந்தார்கள். பாடலில் ஆண் குரல் கிடையாது. இதற்கு முன்பாகவே தமிழில் வாணி ஜெயராம் பாடியிருந்தாலும் இந்தப் பாடல்தான் அவரை எல்லோரும் கவனிக்க வைத்தது. 2. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்: கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடலை எழுதியிருந்தார். இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகத்தில் இடம்பெற்றிருந்தன. பந்துவராளி, சிவரஞ்சனி, சிந்து பைரவி, காம்போதி ஆகிய நான்கு ராகங்கள் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தன. மிகச் சிக்கலான கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு கட்டியம் கூறுவதைப் போ...

இன்றைய இரவின் மடியில் | SPB songs | என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை

 இன்றைய இரவின் மடியில்🎼🎧🎤🎻15/03/2022 அழகு என்ற சொல்லைப் பிடிக்காதவர் இங்கு யாரேனும் உண்டா? இல்லவே இல்லை. ஆறாமறிவு கொண்ட மனிதனால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று இந்த அழகு. உருவத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல சொல்லில் செயலில் என அனைத்திலுமே அழகுணர்வைப் புகுத்துபவன் மனிதன். சட்டென்று ஒரு மின்னலைப்போல் நம் கவனத்தை ஈர்க்கும் தன்மை அழகுக்கு உண்டு. அழகு என்பது பொதுவான ஒன்றுதான்.. அதற்கான அளவுகோல்தான் காண்பவரிடையே மாறுபடுகிறது. இயற்கை கொடுத்த எல்லாமே அழகுதான். நாம் அதைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்தான்.. ஆனால் அது பலநேரங்களில் நடப்பதில்லை. தூய்மையும் புன்னகையும் இயற்கையான அழகூட்டிகள். அதை எப்போதுமே அணிந்திருந்தால் நம் அழகுக்கு நிகர் நாம் மட்டுமே. என்னதான் அழகென்பது இயற்கையான ஒன்று என்றிருந்தாலும் இந்தக் கவிஞர்கள் கையில் , எழுதுகோல் மையில் நுழைந்து வெளிவரும்போது அவ்வழகானது பல பரிமாணங்களில் மிளிர்ந்து ஒளிர்கிறது. அழகுக்கே அழகு சேர்ப்பதுதானே கவிஞனின் இயல்பு. அதிலும் காதலியின் அழகை எழுதுவதற்காக மட்டும் கவிஞர்களுக்குத் தனிமையும் தனி மையும் தனிச்சிறப்புடன் உருவாக்கிக்...

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே ‌ இந்த  பாடல் இடம் பெற்ற படம் & பாடலின் முதல்வரி? சொல்லுங்கள். பாடல் புதிர்

இன்றைய இரவின் மடியில் | Whatsapp paadal lyrics | Whatsapp status | மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

 இன்றைய இரவின் மடியில் 🎼🎧🎤🎻 முத்துலிங்கம் பாடலை எஸ் பி பியும் எஸ் ஜானகியும் பாடி இருக்கிறார்கள். மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது அந்த கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ கண்ணன் பாடும் பாடல் கேட்க.... ராதை வந்தால் ஆகாதோ...... ராதையோடு ஆசை கண்ணன் …பேச கூடாதோ கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசை கண்ணன் பேசக்கூடாதோ ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ...... மணி ஓகேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து..... பாதை மாறி போகும் போது.ஊரும் வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தொட்ட் பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே காலம் மாறுமோ தாளம் சேருமோ.....  ┈❀••🌿🌺🌿••❀┅┉ பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... https://youtu.be/gjBoSSWAqNE  இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றுமொரு இனிய பாடலுடன்

இன்றைய இரவின் மடியில் | தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ

  இன்றைய இரவின் மடியில் 🌺🎼🎧🎤🎻 தந்தை, மகனின் அருமையான படைப்பு. இசைஞானியின் பொக்கிஷ குரல் எங்கோ நம்மை கொண்டுசெல்கிறது. இசைஞானியார் குரல் வளம் தெய்வாம்சம் மூணு தலைமுறை கடந்தும் ஒலிக்குது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது.... இன்னும் வரும் காலங்களில் யுவனின் இசையில் இசை கடவுள் இளையராஜா பல பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் இசைஞானி பாடிய தட்டிப்புட்டா எங்கள் இதய கதவையும் கட்டிப்போட்டுவிட்டது அருமை! யுவன் இசை ஞானி தந்த இசை சித்தர்!! மெல்ல திறந்தது கதவு படத்துல MSV ஐயாவும் இளையராஜா ஐயாவும் இணைந்தப்போ வந்த பாட்டுக்கள் கேட்டபோது கிடைத்த அதே திருப்தி இந்த பாட்டு கேட்க்கும்போது கிடைக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின்....மீண்டும் தென்றலாய் வருடுகிறது...ராகதேவனின் குரலும் இசையும் அருமையான இனிமையான குரல் இளையராஜா அய்யாவின் படைப்பு.. இறைவனின் அற்புதம்..பாடல் எங்கும் ஒலிக்கும்..இதுபோல் இன்று இயற்கையான இசையை எங்கும் காணோம்.. என்னமோ இருக்கு இந்த பாடலில் கரையாதவரையும் கரைக்கும் இசை தரம் குரல் தரம் வரிகள் தரம் இளையராஜா குரல் ஒன்றே போதும் இந்த பாடலின் ச...

இன்றைய இரவின் மடியில் | பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

 இன்றைய இரவின் மடியில்🎼🎧🎤🎻  "பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே  ...." போதையின் வலியையே ஆலாபனை ஆக்கிப், ‘பூமாலை வாங்கி வந்தான்..' (சிந்து பைரவி) என்று ருசிக்கிறது.ராஜாவின் இசையில் வைரமுத்துவின் வார்த்தைகள் பட்டைத் தீட்டப்பட்டவை என்றாள் ஜேசுதாஸின் குரல் ஒரு பெரிய இசை கலைஞன் குடும்ப வாழ்விலிருந்து திசை மாறிப் போய் போதைக்கு அடிமையானதை நெகிழ்வுடன் வெளிப்படுத்தும் இந்த பாடல் மதுவிற்கு அடிமையாகப் பல காரணங்களை மனிதர்கள் சொன்னாலும் அவையெல்லாம் அவனது மனோ பலவீனத்தை மறைக்கக் கூறும் சாக்கேயன்றி வேறில்லை. ஒரு இசை மேதை தன் மனைவியைத் தவிர்த்து வேறுஒரு பெண்ணிடம் காதலுற்று அதனால் ஏற்படும் துயர்களை மறக்க வேண்டு மதுவிற்கடிமையாகிறார். மதுவருந்திய நிலையிலேயே மேடைக் கச்சேரியிலும் பாடுகிறார். இப்பாடல் காட்சியில் அமைந்த ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் மதுவுக்கடிமையாகாமல் நாட்டு மக்களை மீட்கும் சேவையில் ஈடுபடும் பல நல்ல உள்ளங்களுக்கு ஒரு காணிக்கை! ஜே.கே.பி என்ற சங்கீதவித்துவான், சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பைரவி என்னும் மனைவி, சங்கீதத்தை தெய்வமாகப் பூஜிக்கு...

இன்றைய இரவின் மடியில் இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி

 இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻      பாடல் வரிகள் இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா. அமுதா. மொழி வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே வந்தச் சூாியன் பாகுபலி வாகைகள் மகுடங்கள் சூடிடுவான் எங்கள் நாயகன் பாகுபலி கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா. அமுதா. மொழி அம்பென்றும் குறி மாறியதில்லை வாளென்றும் பசி ஆறியதில்லை முடிவென்றும் பின் வாங்கியதில்லை தானே சேனை ஆவான் தாயே இவன் தெய்வம் என்பான் தமையன் இவன் தோழன் என்பான் ஊரே தன் சொந்தம் என்பான் தானே தேசம் ஆவான் சாசனம் ஏது சிவகாமி சொல் அது விழி ஒன்றில் இத் தேசம் விழி ஒன்றில் பாசம் கொண்டே கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா. அமுதா. மொழி படம் : பாகுபலி பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... https://youtu.be/4_KaxS3CZBM?si=3CMrwFC6dgIXVzL7 ••🌿🌺🌿••❀••🌿🌺🌿••❀••🌿🌺🌿••❀

Aayiram Vaasal Idhayam | மகாராணி உன்னை தேடி வரும் நேரமே | இரவின் மடியில்

 இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻   - 03/01/2024       Movie NameAayiram Vaasal Idhayam (1980) (ஆயிரம் வாசல் இதயம்) Music Ilaiyaraaja Singers. P. Jayachandran, S. Janaki Lyrics Pulamaipithan குறிப்பிட்ட இந்தப் பாடலில் ஜெயச்சந்திரன் அவர்கள் மாமேதை ஜேசுதாஸ் அவர்களை ஒரு இஞ்ச் முந்திவிட்டார்... என்ன குழைவு,என்ன தெளிவு.. என்ன பாவனை... மிக அற்புதமான பாடல்... ஜானகி அம்மா...தேவதை...   பாடல் வரிகள் ஆஆ..ஆஆ..ஆஆ.ஆஆஅ.. ஆஆஆஆ..ஆஆஆஆஅ ஆஆ..ஆஆ..ஆஆ.ஆஆஅ.. ஆஆஆஆ..ஆஆஆஆஅ மகாராணி உன்னை தேடி வரும் நேரமே என்றும் குழல் நாதமே தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான் கணை இவள் விழி மகாராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே பைங்கிளி இவள் மொழி தமிழ் தமிழ் பைந்தமிழ் பாடிடும் அதன் சுகம் தரும் தரும் செவ்விதழ் வழங்கும் தினம் மயங்கும் அதில் உலகை மறக்கலாம் கை வந்து தொட்டது மெல்ல காமத்து பாலுரை சொல்ல இளமை பயிலும் தினம் மகாராணி என்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே மார்கழி பனித்துளி பூவிதழ் சேருமோ பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை ...