இன்றைய இரவின் மடியில் | தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ

 இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻


தந்தை, மகனின் அருமையான படைப்பு. இசைஞானியின் பொக்கிஷ குரல் எங்கோ நம்மை கொண்டுசெல்கிறது.


இசைஞானியார் குரல் வளம் தெய்வாம்சம் மூணு தலைமுறை கடந்தும் ஒலிக்குது

எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது.... இன்னும் வரும் காலங்களில் யுவனின் இசையில் இசை கடவுள் இளையராஜா பல பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும்

இசைஞானி பாடிய தட்டிப்புட்டா எங்கள் இதய கதவையும் கட்டிப்போட்டுவிட்டது அருமை! யுவன் இசை ஞானி தந்த இசை சித்தர்!!

மெல்ல திறந்தது கதவு படத்துல MSV ஐயாவும் இளையராஜா ஐயாவும் இணைந்தப்போ வந்த பாட்டுக்கள் கேட்டபோது கிடைத்த அதே திருப்தி இந்த பாட்டு கேட்க்கும்போது கிடைக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப்பின்....மீண்டும் தென்றலாய் வருடுகிறது...ராகதேவனின் குரலும் இசையும்

அருமையான இனிமையான குரல் இளையராஜா அய்யாவின் படைப்பு.. இறைவனின் அற்புதம்..பாடல் எங்கும் ஒலிக்கும்..இதுபோல் இன்று இயற்கையான இசையை எங்கும் காணோம்..


என்னமோ இருக்கு இந்த பாடலில் கரையாதவரையும் கரைக்கும்
இசை தரம் குரல் தரம் வரிகள் தரம்

இளையராஜா குரல் ஒன்றே போதும் இந்த பாடலின் சிறப்பிற்கு. கூடுதலா யுவன்-

 

பாடல் வரிகள்

தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர
எதுவோ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனசால்
மனசில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமான இதமான காதல்தான் இதுவா

தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுரஆ.

மேற்கில் சாயும் மேகம் போல்
மனசும் மயங்கி சாயுதே
சாம்பல் குருவி குயில போல்
உன் பேர் சொல்லி கூவுதே
நீ பேசும் காத்து நான்தானே
என்னோட சேர பாரு
ஊர்கோலம் போக என்னோட
நீ கூட வந்தா ஜோரு

நான் பாட நீ கேட்ட பின்னும்
மாறலையா உன் மனசும் இன்னும்
ஏறாத இறங்காத இசையா நீ சொல்லு..

தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர
எதுவோ இருக்குது என்னுள்ள..
தவியா தவிக்குது மனசால்
மனசில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமான இதமான காதல்தான் இதுவா.

Movie/Album Name : Maamanithan 2021
Singer : Isaignani Ilayaraja
Music Composed by : Isaignani Ilayaraja & Yuvan
Lyrics written by : Pa.Vijay

 ┈❀••🌿🌺🌿••❀┅┉

பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

https://youtu.be/sdEB0cRd_-o

 இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றுமொரு இனிய பாடலுடன்

Comments

Popular posts from this blog

Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்

Germaniyin Senthen Malare Tamil Song Lyrics in English

இன்றைய இரவின் மடியில் | பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே