இன்றைய இரவின் மடியில் | பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

 இன்றைய இரவின் மடியில்🎼🎧🎤🎻 


"பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே  ...." போதையின் வலியையே ஆலாபனை ஆக்கிப், ‘பூமாலை வாங்கி வந்தான்..' (சிந்து பைரவி) என்று ருசிக்கிறது.ராஜாவின் இசையில் வைரமுத்துவின் வார்த்தைகள் பட்டைத் தீட்டப்பட்டவை என்றாள் ஜேசுதாஸின் குரல் ஒரு பெரிய இசை கலைஞன் குடும்ப வாழ்விலிருந்து திசை மாறிப் போய் போதைக்கு அடிமையானதை நெகிழ்வுடன் வெளிப்படுத்தும் இந்த பாடல்

மதுவிற்கு அடிமையாகப் பல காரணங்களை மனிதர்கள் சொன்னாலும் அவையெல்லாம் அவனது மனோ பலவீனத்தை மறைக்கக் கூறும் சாக்கேயன்றி வேறில்லை. ஒரு இசை மேதை தன் மனைவியைத் தவிர்த்து வேறுஒரு பெண்ணிடம் காதலுற்று அதனால் ஏற்படும் துயர்களை மறக்க வேண்டு மதுவிற்கடிமையாகிறார். மதுவருந்திய நிலையிலேயே மேடைக் கச்சேரியிலும் பாடுகிறார். இப்பாடல் காட்சியில் அமைந்த ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் மதுவுக்கடிமையாகாமல் நாட்டு மக்களை மீட்கும் சேவையில் ஈடுபடும் பல நல்ல உள்ளங்களுக்கு ஒரு காணிக்கை!

ஜே.கே.பி என்ற சங்கீதவித்துவான், சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பைரவி என்னும் மனைவி, சங்கீதத்தை தெய்வமாகப் பூஜிக்கும் சிந்து என்ற நண்பி இந்த மூன்று புள்ளிகளை இணைத்துப் பின்னப்பட்ட கதைக்களம் சிந்துபைரவி.ஜே.கே.பி என்ற சங்கீத வித்துவானாகவும் பின்னர் அவர் தரம் தாழ்ந்து போகும் போதும் சிறப்பானதொரு குணச்சித்திர நடிப்பை வழங்கிய சிவகுமார், பைரவி என்னும் சுலக்க்ஷணாவுக்கு இது போல் ஒரு பாத்திரம் இதற்கு முன்னும் பின்னும் கிட்டாத ஒரு வாய்ப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுஹாசினி என்ற நடிகையின் முழுமையான நடிப்பின் பரிமாணத்தைக் காட்டித் தேசிய விருதைக் கொடுத்துக் கெளரவித்தும் ஆயிற்று.

சிந்து பைரவி படத்தில் 14 விநாடிகளே அமையும் ஒரு காட்சி அது. சங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார். கையிருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார்.

அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே காமெராவின் கோணம் கார்க் கண்ணாடி வழியாக மது போதையால் நிறைந்து சித்தம் கலங்கி நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை "பூமாலை வாங்கி வந்தான்" பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் 14 விநாடிகளை நிரப்பிய காட்சி தான் இது. இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதம்

"சிந்து பைரவி"   படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டு காலமாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை . ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே "சிந்து பைரவி" உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது.
   
ஒற்றை வயலினை மட்டும் பின்னணிக்கு வைத்துக் கொண்டு இந்தளவுக்கு ஒரு பாடலை வெற்றிபெற வைக்க முடியும் என்றால் அது இளையராஜா ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் ....இந்த பாடல் கர்நாடக இசையில் மிக சிறப்பு வாய்ந்தது. இந்த பாடல் இளையராஜா அவர்களின் ஒரு சிறந்த ஆராய்ச்சியின் பலன் என்றே கூறலாம்....சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது... பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

சிந்துவாக நடித்த சுகாசினி தன் அற்புதமான நடிப்புத் திறமையாலும், வெகுளித்தனமான சிரிப்பாலும், சிந்து கேரக்டருக்கு ஒரு முழுமையை தந்து, சிந்து கேரக்டரை இமாலய உயரத்துக்கு உயர்த்தி சாதனை புரிந்து விட்டார். அவருக்கு தேசிய விருது கிடைத்தது முற்றிலும் பொருத்தமானது.''  

இளையராஜா இசையும், ஜேசுதாஸ் அவர்களின் குரலும் "ஜே.கே.பி'' கதாபாத்திரத்தை முழுமையான கலைஞனாக மக்கள் முன் காட்ட பெரிதும் உதவின. பாலசந்தர்  படங்களில் காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்கு குறும்பும், புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரை தனித்துக்காட்டும்.  

"பாலசந்தர்  கலை உலகில் அவர் ஒரு பீஷ்மர்.'

பெட்டகத்தில் எங்கோ அடியில் இருக்கும் ஒரு அறிய பொக்கிஷத்தை என்றோ ஒரு நாள் மீண்டும் எடுத்துப் பார்த்தால் எவ்வாறு ஒரு ஆனந்தம் தோன்றும்,அது போன்ற உணர்வு. பாடல்களைக் பலமுறைக் கேட்பது  ஏனோ ஒரு இனம் புரியாத ஆனந்தம்  

"கானடா' இராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்"...இந்த பாட்டு இந்த ராகமா.. என உங்களை எடுத்த எடுப்பிலேயே சட்டென்று உற்சாகப்படுத்தும் சுகமான  நமது கர்நாடக சங்கீதம் மற்றும் ஹிந்துஸ்தானிஇசை

யேசுதாஸ் ஐயாவின் குரல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறது...பாடலை இரவு தலையணியுடன் (Headphone) கேட்டு பா ருங்கள். வயலின், வீணை , புல்லாங்குழல், என இசைக்கருவிகளின் சங்கமம், தாசேட்டனி ன் ஆலா பனை , உங்கள் காதுகளில்  ரீங்காரமிடும்..இதோ உங்களுக்காக!


┈┉❀🌿🍁🌺🍁🌿

🎬 :சிந்து பைரவி 1985
🎻 :இளையராஜா
🖌:  வைரமுத்து      
 🎤:K J யேசுதாஸ்

 ┈❀🌿🌺🌿❀┉┈

பாடல் வரிகள்:

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே தினம் தினம்

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

செவியில்லை இங்கொரு இசையெதற்கு?

விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு?

நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம் பிடித்து விட்டான்

இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்து விட்டான்

ராகம் தாளம் மறந்து விட்டான்

ரசிகனின் கடிதத்தைக் கிழித்து விட்டான்

கடற்கரையெங்கும் மணல் வெளியில்

காதலி காலடி தேடினான்

மோஹனம் பாடும் வேளையிலும்

சிந்துவில் ராகம் பாடினான்

விதியெனும் ஊஞ்சலில் ஆடினான்

போதையினால் புகழிழந்தான்

மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திடப்

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்

குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான்

மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான்

சபதத்தை அவன் இன்று உடைத்து விட்டான்

இசைக்கொரு குயிலென்று ஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ

இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்

இருமலைத் தானின்று சுரம் பிரித்தான்

மனிதர்கள் இருப்பதை மறந்து விட்டான்

மானத்தின் மானத்தை வாங்கி விட்டான்

போதையின் பாதையில் போகின்றான்

தன் முகமே தான் மறந்தான்

சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்பு

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

செவியில்லை இங்கொரு இசையெதற்கு?

விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு?

நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

ஏஏஏஏஏ ஏஏஏஏ

https://youtu.be/DZZ6cfm0AS0

┉❀🌿🌺🌿

இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றுமொரு இனிய பாடலுட

Comments

Popular posts from this blog

Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்

Neethaaney neethaaney /

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்