இன்றைய இரவின் மடியில் | SPB songs | என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
இன்றைய இரவின் மடியில்🎼🎧🎤🎻15/03/2022 அழகு என்ற சொல்லைப் பிடிக்காதவர் இங்கு யாரேனும் உண்டா? இல்லவே இல்லை. ஆறாமறிவு கொண்ட மனிதனால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று இந்த அழகு. உருவத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல சொல்லில் செயலில் என அனைத்திலுமே அழகுணர்வைப் புகுத்துபவன் மனிதன். சட்டென்று ஒரு மின்னலைப்போல் நம் கவனத்தை ஈர்க்கும் தன்மை அழகுக்கு உண்டு. அழகு என்பது பொதுவான ஒன்றுதான்.. அதற்கான அளவுகோல்தான் காண்பவரிடையே மாறுபடுகிறது. இயற்கை கொடுத்த எல்லாமே அழகுதான். நாம் அதைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்தான்.. ஆனால் அது பலநேரங்களில் நடப்பதில்லை. தூய்மையும் புன்னகையும் இயற்கையான அழகூட்டிகள். அதை எப்போதுமே அணிந்திருந்தால் நம் அழகுக்கு நிகர் நாம் மட்டுமே. என்னதான் அழகென்பது இயற்கையான ஒன்று என்றிருந்தாலும் இந்தக் கவிஞர்கள் கையில் , எழுதுகோல் மையில் நுழைந்து வெளிவரும்போது அவ்வழகானது பல பரிமாணங்களில் மிளிர்ந்து ஒளிர்கிறது. அழகுக்கே அழகு சேர்ப்பதுதானே கவிஞனின் இயல்பு. அதிலும் காதலியின் அழகை எழுதுவதற்காக மட்டும் கவிஞர்களுக்குத் தனிமையும் தனி மையும் தனிச்சிறப்புடன் உருவாக்கிக்...