இன்றைய இரவின் மடியில் | பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
இன்றைய இரவின் மடியில்🎼🎧🎤🎻 "பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே ...." போதையின் வலியையே ஆலாபனை ஆக்கிப், ‘பூமாலை வாங்கி வந்தான்..' (சிந்து பைரவி) என்று ருசிக்கிறது.ராஜாவின் இசையில் வைரமுத்துவின் வார்த்தைகள் பட்டைத் தீட்டப்பட்டவை என்றாள் ஜேசுதாஸின் குரல் ஒரு பெரிய இசை கலைஞன் குடும்ப வாழ்விலிருந்து திசை மாறிப் போய் போதைக்கு அடிமையானதை நெகிழ்வுடன் வெளிப்படுத்தும் இந்த பாடல் மதுவிற்கு அடிமையாகப் பல காரணங்களை மனிதர்கள் சொன்னாலும் அவையெல்லாம் அவனது மனோ பலவீனத்தை மறைக்கக் கூறும் சாக்கேயன்றி வேறில்லை. ஒரு இசை மேதை தன் மனைவியைத் தவிர்த்து வேறுஒரு பெண்ணிடம் காதலுற்று அதனால் ஏற்படும் துயர்களை மறக்க வேண்டு மதுவிற்கடிமையாகிறார். மதுவருந்திய நிலையிலேயே மேடைக் கச்சேரியிலும் பாடுகிறார். இப்பாடல் காட்சியில் அமைந்த ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் மதுவுக்கடிமையாகாமல் நாட்டு மக்களை மீட்கும் சேவையில் ஈடுபடும் பல நல்ல உள்ளங்களுக்கு ஒரு காணிக்கை! ஜே.கே.பி என்ற சங்கீதவித்துவான், சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பைரவி என்னும் மனைவி, சங்கீதத்தை தெய்வமாகப் பூஜிக்கு...